குறைக்கப்பட்டது எரிபொருளின் விலை : வெளியானது புதிய அறிவிப்பு

Sri Lanka Fuel Crisis Fuel Price In World
By Fathima Jun 30, 2024 04:55 PM GMT
Fathima

Fathima

இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 344 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விலை விபரம் 

ஒக்டேன் 95 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 41 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 379 ரூபா ஆகும்.

குறைக்கப்பட்டது எரிபொருளின் விலை : வெளியானது புதிய அறிவிப்பு | Fuel Price In Srilanka

ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 355 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.