எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்தம் எதிர்வரும் 30ஆம் திகதி இரவு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மே மாதம் 31ஆம் திகதி இறுதியாக எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் (புதிய விலை 355) லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டிருந்தது.
டீசல் விலை
அதேபோல், ஒரு லீற்றர் டீசலின் (புதிய விலை 317 ரூபா) விலை 16 ரூபாவால் குறைக்கப்பட்டது.
மேலும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 202 ரூபா என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே இன்னும் 4 நாட்களில் மீண்டும் விலை திருத்தம் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |