QR இல்லாமல் எரிபொருள் விநியோகம்: புதிய நடைமுறை தொடர்பில் வெளியான தகவல்

Fuel Price In Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Government Sri Lanka Fuel Crisis QR Code
By DHUSHI Mar 19, 2026 12:02 PM GMT
DHUSHI

DHUSHI

இலங்கையின் கமநல அபிவிருத்தித் திணைக்களம், எரிசக்தி அமைச்சகத்திடம் வழங்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில், விவசாயிகளுக்கு QR இல்லாமல் எரிபொருள் வழங்க ஆரம்பித்துள்ளது.

இந்த நடவடிக்கை இன்று (19.03.2026) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் திடீர் சோதனையின் போது பாலை மரக்குற்றிகள் மீட்பு

கிளிநொச்சியில் திடீர் சோதனையின் போது பாலை மரக்குற்றிகள் மீட்பு

விவசாயிகளுக்கு முன்னுரிமை

இலங்கையின் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் கே.ஏ.சுமித் சந்தனா கூறியதாவது,

எரிசக்தி அமைச்சகத்திற்குக் கிடைத்த அனைத்து பட்டியல்களும் தற்போது எரிபொருள் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. நெரிசல் நிலவுவதால், விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு எரிபொருள் நிலையங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

QR இல்லாமல் எரிபொருள் விநியோகம்: புதிய நடைமுறை தொடர்பில் வெளியான தகவல் | Fuel Distribution To Farmers Without Qr

பெருபோக பயிர்ச்செய்கை ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், விவசாயிகள் இனி எந்த பிரச்சினையுமின்றி எரிபொருளை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விவசாய சேவை மையங்கள் அறுவடை அல்லது நிலப்பணிகளுக்கு எரிபொருள் தேவைப்படும் விவசாயிகளின் பட்டியல்களை தயார் செய்து, சம்பந்தப்பட்ட எரிபொருள் நிலையங்களுக்கு அனுப்புகின்றன.

அறுவடைப் பணிகளுக்கு ஏக்கருக்கு 15 லிட்டர் எரிபொருள், உழவுப் பணிகளுக்கு ஏக்கருக்கு 30 லிட்டர் எரிபொருள் வழங்கப்படும். மேலும், எரிபொருள் வழங்கும் போது விவசாயிகளுக்கு சிரமம் ஏற்படாது, எந்த எரிபொருள் நிலையத்திலிருந்து எளிதாக எரிபொருள் பெறலாம் என்றார். 

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கத்தின் பெறுமதி: இலங்கையில் அடுத்தடுத்து குறைவடைந்த விலை

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கத்தின் பெறுமதி: இலங்கையில் அடுத்தடுத்து குறைவடைந்த விலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அவசர அறுவை சிகிச்சை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அவசர அறுவை சிகிச்சை