35 நாடுகளுக்கு இலங்கை வழங்கியுள்ள வாய்ப்பு

Sri Lanka Sri Lanka Cabinet
By Mayuri Aug 22, 2024 02:14 AM GMT

35 நாடுகளின் பிரஜைகள் இலவச விசா வசதியின் கீழ் இலங்கைக்குப் பிரவேசிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எதிர்வரும் அக்டோபர் முதலாம் திகதி முதல் 6 மாத காலத்திற்கு இந்த வாய்ப்பு குறித்த நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாடுகளின் பட்டியல்

அதன்படி ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், அவுஸ்திரேலியா, டென்மார்க், போலந்து, கஜகஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், நேபாளம், சீனா, இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, செக் குடியரசு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இஸ்ரேல், பெலாரஸ், ஈரான், சுவீடன், தென் கொரியா, கட்டார், ஓமன், பஹ்ரைன், நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கே இவ்வாறு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

35 நாடுகளுக்கு இலங்கை வழங்கியுள்ள வாய்ப்பு | Free Visa For 35 Countries

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW