திருகோணமலையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் இலவச வைத்திய முகாம்

Trincomalee Ministry of Health Sri Lanka Eastern Province
By Rakshana MA Jun 15, 2025 09:29 AM GMT
Rakshana MA

Rakshana MA

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச வைத்திய முகாம் நேற்று (14) கோமரங்கடவெல பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மதவாச்சி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

வைத்திய முகாம் ஏற்பாடு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கிளை நிறுவனங்களான மாகாண சுகாதாரத் திணைக்களம், சுதேச வைத்திய திணைக்களம், சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் சிறுவர் பராமரிப்பு நன்னடத்தை திணைக்களம் ஆகியன இணைந்து இந்த வைத்திய முகாமை ஏற்பாடு செய்திருந்ததாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் செயலாளர் எச்.எம்.டபிள்யூ.ஜீ.திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட அதிரடி சுற்றிவளைப்புகள்

நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட அதிரடி சுற்றிவளைப்புகள்

இலவச வைத்திய முகாம்

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தலைமையில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் என்.தலங்கம, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.எம்.டபிள்.ஜீ.திஸாநாயக்க ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருகோணமலையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் இலவச வைத்திய முகாம் | Free Medical Camp In Madawachchiya

பொதுமக்களுக்கு தேவையான வைத்திய சேவைகளை வழங்குவதற்கு பல்வேறு துறைசார்ந்த வைத்திய நிபுணர்கள் இந்த வைத்திய முகாமில் பங்கேற்றனர்.

இங்கு நோய்களுக்காக மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுவதோடு, கை கால் மூட்டு வலிகள், முறிவுகள் போன்றவற்றுக்கு மசாஜ் சிகிச்சை முறையும் வழங்கப்பட்டன.

சுகாதார அமைச்சினால் கிழக்கு மக்களுக்கு இலவச வைத்திய முகாம்

சுகாதார அமைச்சினால் கிழக்கு மக்களுக்கு இலவச வைத்திய முகாம்

மக்களின் சுகாதாரம் 

இலவசமாக வழங்கப்பட்ட உணவுப்பொருட்கள் மேலும் நோயாளிகளுக்கு, ஆரோக்கிய கஞ்சி மற்றும் பிஸ்கட் ஆகியவைகளும் இலவசமாக வழங்கப்பட்டது.

திருகோணமலையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் இலவச வைத்திய முகாம் | Free Medical Camp In Madawachchiya

இந்த வைத்திய முகாமுக்கு ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து பயனடைந்தனர்.

இதில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர பிரதம செயலாளர் டி.ஏ.சீ.என்.தலங்கம, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள செயலாளர் எச்.யீ.எம்.டபிள்யூ.ஜீ. திஸாநாயக்க, கிழக்கு மாகாண சுதேச வைத்திய திணைக்கள ஆணையாளர் எம்.ஏ.நபீல் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பூர்ணிமா விமலரத்ன, சமூக திணைக்கள பணிப்பாளர் உதயகுமார் சிவராஜா,சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் றிஸ்வானி, திருகோணமலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் குமார் விக்ரமசிங்க, மற்றும் பிரதி பணிப்பாளர் வீ.பிரேமானந் மற்றும் விசேட வைத்திய நிபுணர் குழுவினர் என பலரும் கலந்து கொண்டனர்.

இஸ்ரேலின் தாக்குதலில் இலங்கை பெண்கள் காயம்

இஸ்ரேலின் தாக்குதலில் இலங்கை பெண்கள் காயம்

காத்தான்குடி குறித்து மாநகர சபை உறுப்பினர் அஸ்பர் வெளியிட்ட கருத்து

காத்தான்குடி குறித்து மாநகர சபை உறுப்பினர் அஸ்பர் வெளியிட்ட கருத்து

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW