ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு நான்கு போக்குவரத்து சங்கங்கள் ஆதரவு !
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவை ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கவுள்ளதாக நான்கு பிரதான போக்குவரத்துச் சங்கங்கள் அறிவித்துள்ளன.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுடனான இன்றைய (04) சந்திப்பின் போதே தங்களது ஆதரவை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
ரணிலுக்கு ஆதரவு
இதன்படி, அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம், தேசிய Taxi App முச்சக்கரவண்டி நிபுணத்துவ சங்கம், ஐக்கிய பயணிகள் போக்குவரத்து சேவை நிபுணர்கள் சங்கம், மேல் மாகாண முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டுறவு சங்கம் என்பன தற்போதைய ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
இதன்போது, பொருளாதார நெருக்கடியை அடுத்து கடனில் தவிக்கும் சாரதிகளின் கடனை மீளச் செலுத்துவதை மறுசீரமைக்க அரச வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் சந்தர்ப்பம் வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |