வாழைச்சேனையில் நான்கு போதைப்பொருள் வியாபாரிகள் கைது

Batticaloa Sri Lanka Police Investigation Crime
By Laksi Jan 06, 2025 11:58 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு (Batticaloa)- வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 4 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று (06)  விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாழைச்சேனை (Valaichchenai) கடதாசி ஆலையிலுள்ள விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து  இன்று அதிகாலை 2.00 மணிக்கு குறித்த பிரதேசங்களில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்களின் வீடுகள் முற்றுகையிடப்பட்டது.

தங்கம் வாங்கவுள்ளோருக்கான தகவல் : விலையில் ஏற்பட்ட மாற்றம்

தங்கம் வாங்கவுள்ளோருக்கான தகவல் : விலையில் ஏற்பட்ட மாற்றம்

சட்ட நடவடிக்கை

இதன் போது, பிறந்துறைச்சேனையில் 12 கிராம் 500 மில்லிக்கிராம் ஹரோயினுடன் ஒருவரையும் ஓட்டமாவடியில் 2 கிராம் ஐஸ் போதை பொருளுடன் இருவரையும் போதை மாத்திரையுடன் ஒருவர் உட்பட நான்கு வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனையில் நான்கு போதைப்பொருள் வியாபாரிகள் கைது | Four Drug Dealers Arrested In Valaichchenai

இதனையடுத்து, கைது செய்யப்படவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் இவர்களை நீதிமன்றில் முன்னலைப்படுத்த  நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் வெளியான மற்றொரு பரீட்சை வினாத்தாள்

சமூக வலைத்தளங்களில் வெளியான மற்றொரு பரீட்சை வினாத்தாள்

வட மாகாணத்தில் அரிசி விற்பனை தொடர்பில் விசேட சுற்றி வளைப்புக்கள்

வட மாகாணத்தில் அரிசி விற்பனை தொடர்பில் விசேட சுற்றி வளைப்புக்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW