சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் வரவேற்பு கோபுர அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Ampara Sri Lanka Sri Lankan Schools
By Harrish Jul 24, 2024 09:50 PM GMT
Harrish

Harrish

சம்மாந்துறை கல்வி வலய கமு/சது/சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்படவுள்ள வரவேற்பு கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

கமு/சது/சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அதிபர் எம்.டீ. முஹம்மட் ஜனூபர் தலைமையில் நேற்று(24) நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம். முகம்மட் ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டியுள்ளார்.

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக்கல்வி பணிமனை நிர்வாக பிரதி கல்வி பணிப்பாளர் பி.எம்.வை. அரபாத் முகைதீன், சம்மாந்துறை மஜ்லிஸ் அஸ்-சூரா தலைவர் ஓய்வு பெற்ற சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி அஷ்ஷேக் எம்.ஐ. அமீர் (நளீமி), சம்மாந்துறை உலமா சபை தலைவர் மௌலவி எம்.எல்.எச்.பஷீர் (மதனி), திருகோணமலை மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எம்.எம். மஹ்ரூப் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டுள்ளனர்.

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் வரவேற்பு கோபுர அடிக்கல் நாட்டும் நிகழ்வு | Foundation Event Sammanthurai Muslim College

மேலும், இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் நௌபர் ஏ பாவா, வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஏ.ஆர். நியாஸ் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம். முகம்மட் ஹரீஸின் முயற்சியின் பயனாக ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டில் கமு/சது/சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி வரவேற்பு கோபுரம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery