நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான முன்னாள் அமைச்சர்!

CID - Sri Lanka Police Sri Lanka Politician
By Fathima Jan 27, 2026 05:55 AM GMT
Fathima

Fathima

முன்னாள் அமைச்சர் பி.ஹரிசன் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்குமாறு அவருக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இன்று (27) காலை 8.45 மணியளவில் வருகை தந்துள்ளார்.

நிதிமோசடி 

2008 மற்றும் 2024 க்கு இடைப்பட்ட காலத்தில் ஜனாதிபதி நிதியிலிருந்து பெற்றதாகக் கூறப்படும் நிதி தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCCID) 22 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது விசாரணையைத் தொடங்கியுள்ளன.

இந்த பட்டியலில் முன்னாள் அமைச்சர் பி.ஹரிசனின் பெயரும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.