போலி நாணயத்தாள்களுடன் பல்கலைக்கழக மாணவர் உட்பட இருவர் கைது!

Sri Lanka Police University of Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation
By Fathima May 04, 2023 11:09 PM GMT
Fathima

Fathima

பல்கலைக்கழக மாணவர் ஒருவரும், முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும் போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் இருவரும் யாழ். பாளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூபா 5,000 மதிப்புள்ள 250 போலி நாணயத்தாள்களுடனும் ரூபா 500 மதிப்புள்ள 27 போலி நாணயத்தாள்களுடனும் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.