உணவுப்பொருட்களின் விலையில் திடீர் மாற்றம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Parliament of Sri Lanka Sri Lankan Peoples Money Fast Food Budget 2025
By Rakshana MA Feb 19, 2025 04:22 AM GMT
Rakshana MA

Rakshana MA

திடீரென உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாது என நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வானிலை மாற்றம்! சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வானிலை மாற்றம்! சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

விலை அதிகரிப்பு

அதன்படி, இந்த விலை அதிகரிப்பானது நேற்று (18) நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.

உணவுப்பொருட்களின் விலையில் திடீர் மாற்றம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Food Price Increased In Sri Lanka

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்திற்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படாததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, பிரைட் ரைஸ், கொத்து ஆகியவற்றின் விலைகள் 30 ரூபாவினாலும், தேநீரின் விலை 05 ரூபாவினாலும், பால் தேநீரின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அரச ஊழியர் சம்பள உயர்வு தொடர்பில் வெளியான தகவல்

அரச ஊழியர் சம்பள உயர்வு தொடர்பில் வெளியான தகவல்

சட்டத்தன்மை ஆராயப்படும்

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரி மேலும் கூறுகையில்,

உணவு வகைகளின் விலையை திடீரென அதிகரிக்குமாறு கோருகின்ற சங்கங்களின் சட்டத்தன்மை தொடர்பில் ஆராயப்படும் என எச்சரித்துள்ளார்.

உணவுப்பொருட்களின் விலையில் திடீர் மாற்றம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Food Price Increased In Sri Lanka

அத்துடன் தற்போது பொருட்களின் விலை குறைவடைந்துள்ளது. திடீரென உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார். 

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் மு.கா கலந்துரையாடல்

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் மு.கா கலந்துரையாடல்

நாட்டில் ஏற்பட்ட மின் தடை! காரணத்தை வெளியிட்ட மின்சார சபை

நாட்டில் ஏற்பட்ட மின் தடை! காரணத்தை வெளியிட்ட மின்சார சபை

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW