உணவுப்பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

Ceylon Electricity Board Sri Lanka Food Crisis Economy of Sri Lanka
By Fathima Jan 06, 2026 05:40 AM GMT
Fathima

Fathima

மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலைகளும் அதற்கேற்ப உயர்த்தப்படும் என்று அகில இலங்கை உணவகம் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உணவு தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் எரிவாயு, முட்டை மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதால், தொழில்துறையை பராமரிப்பது மிகவும் நெருக்கடியாகி உள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷனா ருக்‌ஷன் தெரிவித்துள்ளார்.

மூலப்பொருட்களின் விலைகள்

பச்சை மிளகாய் மற்றும் கறி மிளகாய் ஒரு கிலோவின் விலை 2,000 ரூபாயாகவும், பீன்ஸ் ஒரு கிலோவின் விலை 1,000 ரூபாயாகவும், தக்காளி, கரட் உள்ளிட்ட பல காய்கறிகளின் விலை ஒரு கிலோவின் விலை 600 முதல் 7000 ரூபாய் வரை இருக்கும் என தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

உணவுப்பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்! | Food Price Increase In Sri Lanka

இந்த சூழ்நிலை இருந்தபோதிலும், உணவு மற்றும் பானங்களின் விலையை உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் மின்சார கட்டணம் அதிகரித்தால், உணவகம் உரிமையாளர்களால் அதனை தாங்கிக் கொள்ள முடியதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழுந்து வந்த இலங்கை, அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக நிலை குலைந்து போயுள்ளது.

இதன் காரணமாக பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதுடன் அது பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.