பொருளாதார நெருக்கடி குறித்து ஜனாதிபதி அளித்துள்ள விளக்கம்

Anura Kumara Dissanayaka Sri Lanka Economic Crisis Sri Lanka Government Of Sri Lanka Economy of Sri Lanka
By Laksi Jan 28, 2025 10:34 AM GMT
Laksi

Laksi

நாட்டின் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு வருமான வீதத்தை அதிகரிக்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

சர்வதேச சுங்க தினத்தை முன்னிட்டு நேற்று (27) சுங்க திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அத்தோடு, எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான அனைத்து தீர்மானங்களையும் அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்றத்தை நாடிய சிவமோகன்: வழங்கப்பட்ட உத்தரவு

நீதிமன்றத்தை நாடிய சிவமோகன்: வழங்கப்பட்ட உத்தரவு

பொருளாதார நெருக்கடி

இந்த நிலையிலே, சுங்கத்திற்குக் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொறுப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி பொருளாதாரத்தைச் சீராக்குவதற்குச் சுங்கம் மேற்கொண்ட முன்னெடுப்புகளுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி குறித்து ஜனாதிபதி அளித்துள்ள விளக்கம் | Fix The Sri Lanka Economic Crisis President Anura

அத்துடன் வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை வருமான இலக்குகளை அடைவதன் மூலம் மாத்திரம் மீண்டும் கட்டியெழுப்ப முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நாட்டின் பொருளாதார கட்டமைப்பும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதார நெருக்கடியைச் சீர்செய்வதற்கு அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் எம்.பி மாவை வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் எம்.பி மாவை வைத்தியசாலையில் அனுமதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW