நரகிலிருந்து காப்பாற்றும் கலிமா
ஹஜ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது, லா இலாஹ இல்லல்லாஹ் கூறியவருடைய இதயத்தில் அணுவளவு ஈமான் இருந்தாலும் அவரை நரகத்தைவிட்டு வெளியாக்குங்கள்.
இன்னும் லா இலாஹ இல்லல்லாஹ் என்று மட்டும் கூறியவரையும் அல்லது ஏதேனும் ஒரு விதத்தில் என்னை திக்ரு செய்தவரையும், ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் என்னை பயந்தவரையும் நரகத்தை விட்டு வெளியாக்குங்கள் என்று அல்லாஹுதஆலா(கியாமத்து நாளில்) என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.
இப்பரிசுத்தத் திருக்கலிமாவில் அல்லாஹ்தஆலா எத்தனை எத்தனை பரக்கத்துகளை வைத்துள்ளான். இதன் மதிப்பை ஒரு விஷயத்தின் மூலம் நாம் விளங்கிக்கொள்ளலாம்.
நூறு ஆண்டுகள் வரை வாழ்ந்திருந்த ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதையும் குஃப்ரிலும் ஷிர்க்கிலும் கழித்துவிட்டபின் ஒரே ஒரு தடவை இப்பரிசுத்த கலிமாவை கூறி ஈமான் கொண்டு முஸ்லிமாகிவிட்டால் அவனுடைய ஆயுள் முழுவதிலும் உள்ள பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன.
ஈமான் கொண்டபின் பாவங்கள் செய்து விட்டாலும் இக்கலிமாவின் பரக்கத்தினால் ஏதேனுமொரு நேரத்தில் நரகத்திலிருந்து நிச்சயம் விடுதலை பெற்று விடுவான்.