வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து

Batticaloa Eastern Province Fire Accident
By Rakshana MA May 05, 2025 07:50 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு(Batticaloa) – வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இன்றைய தினம்(05) காலை 7 மணியளவில் திடீர் தீ விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவிலேயே குறித்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அக்கறைப்பற்று விளையாட்டு மைதானத்திற்கு மின்னொளி

அக்கறைப்பற்று விளையாட்டு மைதானத்திற்கு மின்னொளி

தீ விபத்து

மின்னொழுக்கினால் குறித்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை, இந்த தீ விபத்தில் எக்ஸ்ரே பிரிவிலிருந்த இயந்திரங்கள், மின்னுபகரணங்கள் சேதமடைந்துள்ளன.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து | Fire Accident At Valaichchenai Base Hospital

குறித்த தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் அதீத முயற்சிகளை மேற்கொண்ட மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவு மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், முன்னேற்பாடுகளை மேற்கொண்ட ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேச சபைகளின் செயலாளர்கள், களத்தில் பணியாற்றிய மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேவை ஆகியோருக்கு மக்கள் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கடவுச்சீட்டு சேவை தொடர்பில் வெளியான அறிவித்தல்

கடவுச்சீட்டு சேவை தொடர்பில் வெளியான அறிவித்தல்

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்!

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW      
GalleryGalleryGalleryGallery