இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

Sri Lanka Sri Lankan Peoples
By Fathima May 02, 2023 11:13 PM GMT
Fathima

Fathima

நாட்டின் சனத்தொகையில் 25 வீதமானோர் விட்டமின் டி குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு பிரிவின் நிபுணர் டொக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களைப் பயன்படுத்தி நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலைமை சற்று ஆபத்தான சூழ்நிலையாக உருவாகக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு | Fever Effect In Sri Lanka Important Announcement

வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

ஆகவே விட்டமின் டி குறைபாட்டைக் குறைக்க முடிந்தால் சூரிய ஒளியில் இருப்பது அவசியம் என்றும், ஆனால் தற்போது நிலவும் கடும் வெப்பம் காரணமாக அதிக சூரிய ஒளியில் இருக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் வைட்டமின் குறைபாடு குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும், சில மாதங்களுக்கு ஒருமுறை வைட்டமின் குறைபாடு குறித்து மருத்துவரை அணுக வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Joint Now