HMPV வைரஸ் குறித்து அச்சம் : பொது மக்களுக்கான அறிவித்தல்

Sri Lankan Peoples China Virus World
By Rakshana MA Jan 09, 2025 05:56 AM GMT
Rakshana MA

Rakshana MA

சீனா(China) முழுவதும் தற்போது பரவி வரும் எச்.எம்.பீ.வீ வைரஸ்(HMPV Virus) குறித்து நாட்டிலுள்ள மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த 20 வருடங்களாக உலகளாவிய ரீதியில் உள்ள பல நாடுகளில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2025ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம்

இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2025ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம்

குளிர் காலத்தில் அதிகம் பரவும் தொற்று

அத்துடன், அந்த வைரஸ் 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இலங்கையிலும் கண்டறியப்பட்டுள்ளதுடன், கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் கண்டி மாவட்டத்திலும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

HMPV வைரஸ் குறித்து அச்சம் : பொது மக்களுக்கான அறிவித்தல் | Fear Of Hmpv Virus Alert To The General Public

இந்த நிலையில், குளிர் காலத்திலேயே இந்த வைரஸ் தொற்று அதிகமாகப் பரவுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இந்த வைரஸ் குறித்து இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சமூக வலுவூட்டல் வேலைத்திட்டம் தொடர்பான கருத்தரங்கு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான சமூக வலுவூட்டல் வேலைத்திட்டம் தொடர்பான கருத்தரங்கு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW