மட்டக்களப்பில் போதைப்பொருள் வாங்குவதற்காக மகளை துன்புறுத்திய தந்தை கைது!

Sri Lanka Police Batticaloa Sri Lanka Police Investigation
By Fathima Jan 07, 2026 01:32 PM GMT
Fathima

Fathima

மட்டக்களப்பில் போதைப் பொருள் வாங்குவதற்காக 14 வயது மகளின் கையில் இருந்த தங்க வளையலை கழட்டி தருமாறு தந்தையொருவர் சிறுமியை அடித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

அடித்து தாக்கியதில் சிறுமி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து தந்தையை கைது செய்து பின்னர் எச்சரித்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் பாவனை

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (05.01.2026) காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மாவிலங்குதுறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் போதைப்பொருள் வாங்குவதற்காக மகளை துன்புறுத்திய தந்தை கைது! | Father Attacks Daughter For Drug Money

இது பற்றி தெரியவருவதாவது, குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள நிலையில், அதனை வாங்குவதற்கு பணம் இல்லாததையடுத்து 14 வயது சிறுமியான அவரது மகளின் கையில் இருந்த 3 பவுண் தங்க வளையலை கழட்டி தருமாறு கோரியுள்ளார்.

குறித்த சிறுமி அதனை கழட்டி கொடுத்ததையடுத்து, சிறுமியை அடித்து தாக்கியதில் சிறுமி காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இது தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்ததையடுத்து, குறித்த நபரை பொலிஸார் கைது செய்ய சென்ற போது பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அவரை கைது செய்தனர். அதனை அடுத்து கைது செய்தவரை பொலிஸார் எச்சரித்து விடுவித்துள்ளனர்.