கொழும்பிலிருந்து சென்ற தொடருந்தில் சிக்குண்டுண்டு பலியான யானை.. பயணிகள் சிரமத்தில்

Colombo Trincomalee Sri Lanka Railways Accident Train
By Kiyas Shafe Feb 17, 2026 10:46 AM GMT
Kiyas Shafe

Kiyas Shafe

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தபால் கடுகதி தொடருந்து இன்று அதிகாலை கந்தளாய், அக்போபுர காட்டுப் பகுதியில் யானை மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தொடருந்து இயந்திரத்திற்குள் யானை நசுங்கி சிக்கிக்கொண்டதையடுத்து, போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டதுடன் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, நேற்று (16) இரவு 9.30 மணியளவில் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து திருகோணமலை நோக்கிப் புறப்பட்ட இரவு நேர தபால் கடுகதி தொடருந்து, இன்று (17) அதிகாலை 5 மணியளவில் அக்போபுர காட்டுப் பகுதியை கடக்க முயன்றது.

பெண்கள் பாடசாலைக்குள் நுழைந்த மர்ம நபர் - மாணவிக்கு நேர்ந்த கொடுமை

பெண்கள் பாடசாலைக்குள் நுழைந்த மர்ம நபர் - மாணவிக்கு நேர்ந்த கொடுமை

  

குறுக்கிட முயன்ற யானை 

இதன்போது, தண்டவாளத்தைக் குறுக்கறுக்க முயன்ற யானை ஒன்று தொடருந்துடன் மோதியதுடன், அதன் உடல் தொடருந்து இயந்திரத்தின் கீழ்ப்பகுதியில் சிக்குண்டது.

கொழும்பிலிருந்து சென்ற தொடருந்தில் சிக்குண்டுண்டு பலியான யானை.. பயணிகள் சிரமத்தில் | Fatal Accident In Kanthalai Elephant Died

இந்த விபத்தினால் தொடருந்தை மேற்கொண்டு இயக்க முடியாத நிலை ஏற்பட்டது விபத்து நடந்த இடம் அடர்ந்த காட்டுப் பகுதி என்பதால், மாற்று போக்குவரத்து வசதிகள் எவையும் உடனடியாகக் கிடைக்கவில்லை.

இதனால் அச்சமடைந்த பயணிகள், யானை நடமாட்டம் மிகுந்த அந்த ஆபத்தான காட்டுப் பாதை வழியாகவே பல மைல் தூரம் கால்நடையாகப் பயணித்து பிரதான வீதியை வந்தடைந்தனர் பின்னர் அங்கிருந்து வேறு வாகனங்கள் மூலம் தமது பயணத்தைத் தொடர்ந்தனர்.

தொடருந்துத் திணைக்கள அதிகாரிகள்

இச்சம்பவம் குறித்து அந்தத் தொடருந்தில் பயணித்த ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், "அதிகாலை வேளையில் ஏற்பட்ட பலத்த அதிர்வினால் நாம் திடுக்கிட்டு எழுந்தோம்.

கொழும்பிலிருந்து சென்ற தொடருந்தில் சிக்குண்டுண்டு பலியான யானை.. பயணிகள் சிரமத்தில் | Fatal Accident In Kanthalai Elephant Died

இயந்திரத்திற்குள் யானை சிக்கியிருந்த காட்சி மிகவும் உருக்கமாக இருந்தது வேறு வழியின்றி குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் காட்டின் வழியாகப் பயத்துடன் நடந்து சென்று வீதியை அடைந்தோம்" எனத் தெரிவித்தார்.

விபத்தினால் சேதமடைந்த தொடருந்தை அகற்றி, போக்குவரத்தைச் சீர்செய்யும் பணிகளில் தொடருந்துத் திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அநுர - பிரித்தானிய துணைப் பிரதமரிடையே விசேட சந்திப்பு

அநுர - பிரித்தானிய துணைப் பிரதமரிடையே விசேட சந்திப்பு

சர்வதேச சந்தையில் அதிரடி மாற்றம் கண்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை! இலங்கை நிலவரம்

சர்வதேச சந்தையில் அதிரடி மாற்றம் கண்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை! இலங்கை நிலவரம்