15ஆம் திகதி விடுமுறை தொடர்பில் அறிவித்தல்
எதிர்வரும் 15 ஆம் திகதி விடுமுறை தினம் என சமூக ஊடகங்களில் வெளியான செய்தி போலியானது என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (10) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் அவ்வாறான ஒரு தீர்மானத்தை இதுவரை எடுக்கவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விடுமுறை தினங்கள்
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத் தகவல் திணைக்களம் ஊடக அறிவித்தல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அத்தோடு வெள்ளிக்கிழமையும் புனித வெள்ளி வருவதால், குறிப்பிட்ட வாரத்தில் வேலை நாட்களாக மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன.
எனவே அந்த திகதியில் விடுமுறை குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |