சீனிக்கான இறக்குமதி வரி நீடிப்பு
இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு விசேட வர்த்தக பண்ட வரியை நீடிக்கப்போவதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சீனி ஒரு கிலோகிராம் கடந்த வருடம் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு 50 ரூபா விசேட வர்த்தக இறக்குமதி வரியாக காணப்பட்டது.
வரிக் கால நீடிப்பு
இது இந்த மாதம் 01ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரும் நிலையில் குறித்த வர்த்தக பண்ட வரியினை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரையிலும் நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
குறித்த கால நீடிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பினை நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, தற்போதுள்ள அரசாங்கம் உணவுப் பொருட்களுக்கான வரியினை குறைப்பதாக கூறியுள்ள போதிலும், அது தொடர்பான வரிகளை அறவிடும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருவதாக மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |