புகையிரத பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Weather Train
By Fathima Dec 01, 2025 01:22 PM GMT
Fathima

Fathima

நவம்பர் மாதத்திற்கான புகையிரத பருவச்சீட்டின் (Season Ticket) செல்லுபடியாகும் காலம் 2025.12.07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக 2025 நவம்பர் மாதத்திற்கு செல்லுபடியான மாதாந்த மற்றும் மூன்று மாத காலப் பருவச்சீட்டுகளை 2025.12.07 ஆம் திகதி வரை பயன்படுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

பருவச்சீட்டு

புகையிரத போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், புகையிரத பயணங்களின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட வேண்டியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரத பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு | Extension Of Season Ticket Validity

அத்துடன், பயணச் சிரமங்கள் காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே புகையிரத பருவச் சீட்டுகளை வாங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.