பரீட்சை விடைத்தாள் கசிவு விவகாரம்: ஆசிரியர் பணியிடை நீக்கம்

Department of Examinations Sri Lanka North Central Province Crime Teachers
By Laksi Jan 08, 2025 06:16 AM GMT
Laksi

Laksi

வடமத்திய மாகாணத்தில் பரீட்சை வினாத்தாள்களுக்கான விடைகளை சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஆசிரியர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வடமத்திய மாகாண கல்விச் செயலாளரால் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமத்திய மாகாணத்தில் 6 மற்றும் 7 ஆம் வகுப்பு புவியியல் தேர்வுகளுக்கான விடைத்தாள்களை சமூக ஊடகங்களில் கசியவிட்டதை, ஆசிரியர் ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ளதாக  விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

போலி குறுஞ்செய்திகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை

போலி குறுஞ்செய்திகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை

ஆசிரியர் மீது நடவடிக்கை

இதனையடுத்து, விசாரணை அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்துள்ளார்.

இந்த தேர்வுகள் இந்த மாதம் 10ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11ஆம் வகுப்புக்கான பருவத் தேர்வுகள் அடுத்த 10 நாட்களுக்குள் நடத்தப்படும் என்று வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.

காத்தான்குடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பலர் கைது

காத்தான்குடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பலர் கைது

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW