கேகாலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சடலமாக மீட்பு

Kegalle SLPP Sri Lanka Sri Lanka Police Investigation Crime
By Laksi Oct 29, 2024 08:36 AM GMT
Laksi

Laksi

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கேகாலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தனது வீட்டில் கட்டிலில் கை, கால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று (28) கேகாலை- கொஸ்ஸின்ன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ஹெட்டிமுல்ல - புலுருப்ப பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய கிருஷாந்த புலஸ்தி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு: தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு: தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

திருடப்பட்ட கார் 

இந்த நிலையில், அவரது மனைவி வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டு, வீட்டில் இருந்த அலமாரிகள் அனைத்தும் திறந்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கேகாலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சடலமாக மீட்பு | Ex Member Of Slpp Recovered Dead Body In Kegalle

அத்தோடு, சந்தேகநபர்களின் தாக்குதலால் குறித்த பெண்ணும் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் பொலிஸாரால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அவர்களது திருடப்பட்ட கார் பின்தெனிய பொலிஸ் பிரிவில் விட்டுச் செல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறித்து நளின் ஜயசுந்தர வெளியிட்டுள்ள தகவல்

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறித்து நளின் ஜயசுந்தர வெளியிட்டுள்ள தகவல்

மேலதிக விசாரணை

இதனையடுத்து, நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கேகாலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சடலமாக மீட்பு | Ex Member Of Slpp Recovered Dead Body In Kegalle

இந்தநிலையில், தாக்குதலுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொது இடங்களில் வைஃபை பயன்டுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பொது இடங்களில் வைஃபை பயன்டுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW