வெள்ளவத்தையில் கடை உரிமையாளரால் பணியாளருக்கு நேர்ந்த அவலம்
கொழும்பு, வெள்ளவத்தையில் கடை உரிமையாளரால் பணியாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (16) காலை வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒவார் பல்பொருள் அங்காடிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே உயிரிழந்தார்.
உரிமையாளர் கைது
இதனையடுத்து, கொலை குற்றச்சாட்டில் புஸ்ஸலாவை - எல்பொட தோட்டப் பகுதியைச் சேர்ந்த 42 வயதான தையல் நிலைய உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், சந்தேகநபர் கல்கிஸ்ஸ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |