காட்டு யானைகளின் அட்டகாசத்தால் இருவர் உயிரிழப்பு
மொனராகலை - வெல்லவாய, ரந்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கிக் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று(23) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் ரந்தேனியவைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 58 வயது நபரே உயிரிழந்துள்ளார்.
யானைகளின் அட்டகாசம்
இவர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது வீதியில் இருந்த காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுமேதங்கபுர எனும் பகுதியில் வைத்து யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவமும் நேற்று(23) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மூதூர் - மல்லிகைத்தீவச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான தம்பிராசா வர்ணகுரரெட்ணம் (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார். தோப்பூர் -நாராயணபுரத்தைச் சேர்ந்த யோகராசா (வயது 46) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
இது தொடர்பில் வெல்லவாய மற்றும் சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |