அக்டோபரில் புதிய கடவுச்சீட்டுக்கள்

Sri Lanka Passport
By Mayuri Aug 10, 2024 02:31 AM GMT

அக்டோபர் மாதம் முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இதுவரை வழங்கப்பட்ட கடவுச்சீட்டுக்களில் 23 வீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

புதிய கடவுச்சீட்டு

மற்ற கடவுச்சீட்டுக்கள் வாங்கப்பட்டன, ஆனால் பயன்படுத்தப்படவில்லை.

அக்டோபரில் புதிய கடவுச்சீட்டுக்கள் | Electronic Passports From October

இந்த இரண்டு மாதத்திற்கான கடவுச்சீட்டை அவசியமானால் மட்டுமே பெற்றுக்கொள்ளுமாறு மக்களை கேட்டுக்கொள்கின்றேன்.

இல்லையெனில், அக்டோபரில் புதிய கடவுச்சீட்டை பெறுவீர்கள் என குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW