மின்சாரக் கட்டணம் தொடர்பில் பொதுமக்களிடம் ஆலோசனை

CEB Monaragala Sri Lankan Peoples Ceylon Electricity Board Uva Province
By Rakshana MA Dec 30, 2024 08:52 AM GMT
Rakshana MA

Rakshana MA

ஊவா மாகாணத்தை மையமாக வைத்து இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டண திருத்த யோசனை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (30) பொதுமக்களிடம்  ஆலோசனைகளை நடத்தவுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட, எதிர்வரும் 2025 ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான 6 மாத காலப்பகுதிக்கான மின்சார கட்டண திருத்த யோசனைக்கான பொது கலந்தாய்வு கடந்த டிசம்பர் 17ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது.

தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் : புது வருடத்துடன் நடைமுறைக்கு

தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் : புது வருடத்துடன் நடைமுறைக்கு

மின்சாரக்கட்டணம் 

இதன்படி, மின்சார நுகர்வோர் உட்பட மின்சாரத் துறையில் உள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும் யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு வசதியாக அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய பொது கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

மின்சாரக் கட்டணம் தொடர்பில் பொதுமக்களிடம் ஆலோசனை | Electricity Tariff Revision Of Uva Province

அத்துடன் ஊவா மாகாணம் தொடர்பில் மாகாண மட்டத்தில் இடம்பெற்ற மக்கள் கருத்தறியும் வாய்மொழி கருத்துக்கள் இன்று மொனராகலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுமக்களுடனான கலந்தாய்வின் போது முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை கருத்திற்கொண்டு அடுத்த ஆண்டுக்கான மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான இறுதித் தீர்மானம் ஜனவரி 17ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

மூதூர் - சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையம் நடாத்திய விருது வழங்கல் நிகழ்வு

மூதூர் - சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையம் நடாத்திய விருது வழங்கல் நிகழ்வு

இலங்கையில் தற்போது மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் தற்போது மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW