மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
எதிர்வரும் டிசம்பர் மாதம் 6% இனால் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படலாம் என இலங்கையின் பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் திருத்தப்படும் மின்கட்டணத்திற்கமைய இவ்வருடம் டிசம்பர் மாதத்திற்கான மின் கட்டணத்தினை திருத்துவதற்கான முன்மொழிவினை மின்சார சபையானது ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளது என தகவல் வெளியிட்டுள்ளது.
மூன்றாம் காலாண்டிற்கான மின்கட்டணம்
மின்சாரக்கட்டணத்தை 4% முதல் 11% வரை குறைக்க முன்வந்துள்ளதாகவும், இதனடிப்படையில் அனைத்து துறைகளுக்கும் 6% ஆக இருக்கும் என தெரிவித்துள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிறுவன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் திரு. ஜெயநாத் ஹேரத் தெரிவிக்கையில், இந்த முன்மொழிவானது தற்போது ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகின்றது, மேலும் இதில் திருத்தங்கள் தேவைப்படுமாயின் அதனை முன்மொழிவாக்கி எதிர்வரும் திங்கட்கிழமை (28) மின்சார சபைக்கு அனுப்பி வைக்கப்படும்.
மேலும் அனுப்பப்பட்டுள்ள முன்மொழிவுகள் அனைத்தும் கலந்தாய்வுக்குட்படுத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான மின் கட்டணங்கள் மார்ச் 4ஆம் திகதி திருத்தப்பட்டன, அப்போது அனைத்து பிரிவுகளுக்கும் 21.9% மின் கட்டணம் திருத்தப்பட்டதுடன், இரண்டாவது காலாண்டின் மின் திருத்தம் ஜூலை 16ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது, அப்போது அனைத்து பிரிவுகளுக்கும் திருத்தப்பட்ட தொகை 22.5% ஆக காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |