மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
செலவுகள் குறையாமல் மின்சார கட்டணங்களை மேலும் குறைப்பது இலங்கை மின்சாரசபையின் நிதி செயல்திறனை கணிசமாக பாதிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின்(Central Bank SL) வருடாந்த பொருளாதார விமர்சன அறிக்கையின் படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.
2024 ஜனவரி மாதத்தில் மின்சார கட்டணங்கள் 20% இனால் குறைக்கப்பட்டு கட்டண திருத்தம் ஒன்று செய்யப்பட்டது.
மின்சார கட்டண திருத்தம்
இருப்பினும், இந்த திருத்தம் உண்மையான செலவுகளை எவ்வளவு பிரதிபலிக்கிறது என்பதில் இன்னும் தெளிவின்மை உள்ளது என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
2024 இல் மின்சார கட்டணங்கள் இரு முறைகள் திருத்தப்பட்டுள்ளன. மார்ச் மாதத்தில் 21.9% மற்றும் ஜூலை மாதத்தில் 22.5% இனால் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டணக் குறைப்பின் காரணமாக, வருடத்தின் இரண்டாவது பாதியில் மாதாந்திர இலாபம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இலங்கை மின்சாரசபை 2024 இல் ரூ.148.6 பில்லியன் இலாபத்தை ஈட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |