மின் கட்டண குறைப்பு! வெளியான புதிய அறிவிப்பு

Sri Lankan Peoples Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices Sri Lanka Government Economy of Sri Lanka
By Chandramathi Jun 11, 2023 09:37 AM GMT
Chandramathi

Chandramathi

மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபை சில யோசனைகளை முன்வைத்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படவுள்ள மின்கட்டண திருத்தத்தின் போது மின் கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனைக்கு அமைய, 0 – 30 வரையான மின்சார அலகுகளை பயன்படுத்தும் நுகர்வோருக்கான மின் கட்டணம் 26.9 சதவீதத்தால் குறைக்கப்படும்.

இலங்கை மின்சார சபையின் யோசனைகள்

மின் கட்டண குறைப்பு! வெளியான புதிய அறிவிப்பு | Electricity Charges Electricity Bill In Sri Lanka

31 முதல் 60 வரையான மின்சார அலகுகளை பயன்படுத்தும் நுகர்வோருக்கு 10.8 சதவீதமும், 61 முதல் 90 வரையான அலகுகளுக்கு 7.2 சதவீதமும் கட்டணம் குறைக்கப்படும்.

இதேவேளை அதிகளவான மக்கள் பயன்படுத்தும் 91 – 180 வரையான அலகுகளுக்கு 3.4 சதவீதம் கட்டணம் குறைக்கப்படும்.

மேலும் 180 அலகுகளுக்கு அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கான கட்டணத்தை 1.3 சதவீதத்தால் குறைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.