மின் கட்டணத்தில் திருத்தம்

Sri Lanka Electricity Prices Kanchana Wijesekera Sri Lanka Government
By Fathima May 03, 2023 09:47 AM GMT
Fathima

Fathima

எதிர்வரும் ஜூலை மாதம் மின் கட்டணம் மீளாய்வு செய்யப்பட்டு திருத்தம் செய்யப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

செலவு அடிப்படையிலான விலை சூத்திரம்

மின் கட்டணத்தில் திருத்தம் | Electricity Bill In Sri Lanka

அந்த பதிவில், அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் 2022 டிசம்பரில் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

அந்த முடிவுகளின் படி, செலவு அடிப்படையிலான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தவும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதை மறுபரிசீலனை செய்யவும், திருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Join Now