மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பில் வெளியாகவுள்ள அறிவிப்பு

Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices Public Utilities Commission of Sri Lanka
By Mayuri Jul 15, 2024 06:31 AM GMT

இந்த ஆண்டுக்கான இரண்டாவது மின்சார கட்டணத் திருத்தத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று அறிவிக்கவுள்ளது.

மின்சார கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை அண்மையில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்திருந்தது.

முன்மொழிவு மீளாய்வு

இந்தக் கட்டணத் திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை மீளாய்வு செய்து உரிய தரவுகளை ஆராய்ந்து பொதுமக்களின் கருத்துக்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பெற்றுள்ளது.

மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பில் வெளியாகவுள்ள அறிவிப்பு | Electricit Price In Sri Lanka Today

இந்த நிலையில் இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று காலை இடம்பெறவுள்ளதுடன் திருத்தப்பட்ட மின்சார கட்டணம் பிற்பகல் அறிவிக்கப்படும் எனவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW