வாக்களிக்க விடுமுறை வழங்குவது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
தனியார் மற்றும் அரை அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் வாக்களிக்க விடுமுறை அளிக்க வேண்டும் என பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ஒரு அமைப்பின் தலைவர் இந்த சட்டத்திற்கு இணங்காமல், ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கவில்லை என்றால், அதுபற்றி பெப்ரல் அமைப்புக்கு அறிவிக்குமாறு அதன் தலைவர் ரோஹன ஹெட்டியாராச்சி கூறுகிறார்.
சிறைத்தண்டனை வழங்க முடியும்
இவ்வாறான நிறுவன தலைவர் சட்டத்தின் முன் குற்றவாளி எனவும், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி இரண்டு இலட்சம் ரூபா அபராதமும் ஒரு மாத சிறைத்தண்டனையும் வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அவ்வாறான சம்பவங்கள் பதிவாகினால் அது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்படும் என பெப்ரல் அமைப்பின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |