வருடாந்த இடமாற்ற நடைமுறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

Election Commission of Sri Lanka Election
By Mayuri Jul 30, 2024 08:38 AM GMT
Mayuri

Mayuri

ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடாத வகையில் 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற நடைமுறையை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு 2025ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த சேவை அதிகாரிகளின் வருடாந்த இடமாற்ற அறிவிப்பை ஒருங்கிணைந்த சேவைகள் சுற்றறிக்கையின் ஊடாக வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் களுத்துறை, காலி மாவட்டப் பணிப்பாளர் நியமனம்

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் களுத்துறை, காலி மாவட்டப் பணிப்பாளர் நியமனம்

நேற்று (29) அனைத்து அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிராந்திய செயலாளர்களுக்கு இது தொடர்பான இடமாற்ற சுற்றறிக்கை ஒருங்கிணைக்கப்பட்ட சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம்

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகளை விநியோகிப்பதற்காக 8,000 அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

வருடாந்த இடமாற்ற நடைமுறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு | Election Commission Special Notification

உத்தியோகபூர்வ தபால் வாக்குகள் மற்றும் விசேட கடிதங்களை விரைவாக விநியோகிக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சட்டபடி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும், ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக இலங்கை ஐக்கிய கிராம அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார். 

கொழும்பு துறைமுகத்திற்கு உலகளவில் கிடைத்துள்ள அங்கீகாரம்

கொழும்பு துறைமுகத்திற்கு உலகளவில் கிடைத்துள்ள அங்கீகாரம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW