பிரசார செலவுகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்காத 34 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள்

Election Commission of Sri Lanka
By Mayuri Oct 06, 2024 11:15 AM GMT
Mayuri

Mayuri

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய 38 வேட்பாளர்களில் 34 பேர் இதுவரை பிரசார செலவுகள் தொடர்பான அறிக்கையை வழங்கவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதுவரையில் 4 வேட்பாளர்கள் மாத்திரமே பிரசார செலவு தொடர்பான அறிக்கையை சமர்பித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் தகவலில் மேலும், தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச, இலங்கை சோசலிசக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த தேவகே, சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர்களான பிரேமசிறி மானகே மற்றும் K.ஆனந்த குலரத்ன ஆகியோர் மாத்திரமே தேர்தல் பிரச்சார செலவுகள் தொடர்பான அறிக்கையை சமர்பித்துள்ளனர்.

பிரசார செலவுகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்காத 34 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் | Election Commission Special Notice

அறிக்கை சமர்ப்பிப்பு

தேர்தல் செலவுகள் வரையறை சட்டத்தின் கீழ் எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

குறித்த திகதிக்கு முன்னர் அறிக்கையை சமர்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

13ஆம் திகதிக்கு பின்னர் அறிக்கை சமர்பிக்கப்படுமாக இருந்தால் அதனை சட்டவிரோத நடவடிக்கையாக கருதி அவர்களுக்கு எதிராக தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் .

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW