தபால் மூல வாக்காளர்களின் பெயர்ப்பட்டியலைக் காட்சிப்படுத்த வேண்டும்! தேர்தல்கள் ஆணைக்குழு
2024 ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்காளர்களின் பெயர்ப்பட்டியலைக் காட்சிப்படுத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரே மாதிரியான பெயர்கள் இருப்பின் தமது தகவல்களை வேறு ஒருவர் ஊடாக சரிபார்த்து அதன் பின்னர் தபால் வாக்களிப்பு விண்ணப்பங்களை பூரணப்படுத்துவதை தவிர்க்குமாறு தபால் மூல வாக்காளர்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இலவச விண்ணப்பங்கள்
இதற்கான விண்ணப்பங்களை வாக்காளர் பெயர்ப்பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இடங்களிலும் மாவட்ட தேர்தல் காரியாலயங்களிலும் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பங்களை பெற முடியும் என்பதுடன் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதியான அனைவரும் விண்ணப்பங்களை ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் உரிய மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெறும் வகையில் அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |