தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசார பயண ஒழுங்கு

P Ariyanethran Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Rukshy Aug 18, 2024 04:39 AM GMT
Rukshy

Rukshy

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் குரலாகவும், குறியீடாகவும் களமிறக்கப்பட்டிருக்கும் பா.அரியநேத்திரனின் தேர்தல் பிரசார பயண ஒழுங்கு பொலிகண்டி தொடக்கம் பொத்துவில் வரைக்குமான தமிழர் தாயகப் பிரதேசங்கள் முழுவதுமாக நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று (18.08.2024) காலை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் நினைவுத்தூபியில் மலர் வணக்கம் செலுத்துவார்.

அதன்பின் ஆலய, தேவாலய வழிபாடுகளைத் தொடர்ந்து பிற்பகல் முள்ளிவாய்க்காலில் மலர் வணக்கம் செலுத்தப்படும்.

சஜித்திடம் இருந்து விலகியதுக்கு இதுவே காரணம்! போட்டுடைத்தார் சரத் பொன்சேகா

சஜித்திடம் இருந்து விலகியதுக்கு இதுவே காரணம்! போட்டுடைத்தார் சரத் பொன்சேகா

பொதுக்கூட்டம்

பின்னர் முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு பொதுவேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் இடம்பெறும். 

தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசார பயண ஒழுங்கு | Election Arrangements Tamil General Candidate

அதனைத் தொடர்ந்து வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் இரண்டு கூட்டங்களும் மாவட்டங்களிற்கு ஒரு பெரும் பொதுக்கூட்டமும் பொதுவேட்பாளர் கலந்து கொள்ளும் கூட்டமாக இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 19 - 25 வரை யாழ்ப்பாணத்திலும், 26-29 வரை கிளிநொச்சியிலும், ஆகஸ்ட் 30 - செப்ரெம்பர் 03 வரை முல்லைத்தீவிலும், செப்ரெம்பர் 04 - 06 வரை மன்னாரிலும், செப்ரெம்பர் 07-09 வரை வவுனியாவிலும், செப்ரெம்பர் 10-12 திருகோணமலையிலும், செப்ரெம்பர் 13-14 அம்பாறையிலும், செப்ரெம்பர் 15-19 வரை மட்டக்களப்பிலும் பொதுவேட்பாளர் கலந்து கொள்ளும் கூட்டங்கள் நடைபெறும்.

பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

அரச பணியாளர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு அதிகரிக்கப்படும்: ஜனாதிபதி

அரச பணியாளர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு அதிகரிக்கப்படும்: ஜனாதிபதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW