இந்து சமுத்திரத்தை நெருங்கும் எல்நினோ! பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

Jaffna Mannar Sri Lankan Peoples Weather Water
By Kajinthan Jul 12, 2026 04:50 AM GMT

மத்திய பசுபிக் பிராந்திய கடற் பகுதிகளில் இருந்து இந்து சமுத்திர கடல் பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள எல்நினோ தாக்கம் இம்மாதம் ஜூலை தொடக்கம் அக்டோபர் மாதம் வரை வெப்ப தாக்கத்தைச் செலுத்தும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியரும் கலை பீடாதிபதியுமான நாகமுத்து பிரதிபராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ். கலட்டி வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பு ஏற்பாடு செய்த எல்நினோ தொடர்பான விவசாய போதன ஆசிரியர்கள் மற்றும் கடற்தொழில் சார்ந்தவர்களுக்கான செயலமர்வில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம்

இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள கடல் வெப்பம் இலங்கை மற்றும் மாலைதீவில் அதிக தாக்கத்தை செலுத்த வாய்ப்புகள் உள்ளது.

இந்து சமுத்திரத்தை நெருங்கும் எல்நினோ! பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல் | El Nino Approaching Indian Ocean Advice To Public 

இலங்கையை பொறுத்தவரையில் குறிப்பாக வட மாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார் , கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பாரிய நீருக்கான தட்டுப்பாட்டினை ஏற்படுத்தும்.

நிலத்தின் ஊடாக வெப்பத்தை கடத்துவதிலும் பார்க்க 16 மடங்கு வேகமாக நீரின் ஊடாக வெப்பம் கடத்தப்படுகின்ற நிலையில் இந்த சமுத்திரக்கடற்பரப்பில் ஏற்படுகின்ற கடல் வெப்ப ஏற்றம் வேகமாக ஏனைய பகுதிகளுக்கும் பரவும்.

ஜூலை செப்டம்பர் மாதங்களில் அதிகமான வறட்சியை ஏற்படுத்துகின்ற எல்நினோ அக்டோபர், நவம்பர் மாதங்களில் பாரிய மழை வீழ்சியையும் ஏற்படுத்தும்.

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

இருப்பினும், இந்த தாளமுக்கங்கள் அக்டோபர் மாதத்திற்கு பின்னரான காலப்பகுதியிலே ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கும் நிலையில் அதுவரையான காலப்பகுதியில் அதிக வரட்சியே நிலாவும்.

இந்து சமுத்திரத்தை நெருங்கும் எல்நினோ! பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல் | El Nino Approaching Indian Ocean Advice To Public

ஆகவே எல்நினோ இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில் பொதுமக்கள் நீர் முகாமைத்துவத்தை சரியாக பின்பற்றி அதிக வெப்பத்தினால் ஏற்படுகின்ற நீர்த்தட்டுப்பாட்டினை சமாளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் வட மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் அஞ்சனாதேவி சிறிரங்கன், யாழ். மாவட்ட கடற்தொழில் நீரயல் வள திணைக்கள உதவி பணிப்பாளர் எஸ்.அகிலன் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பு ஜான்சன் பிரிடாரோ ஆகியோர் கலந்துகொண்டனர்.


GalleryGalleryGalleryGallery