நபிவழி மருத்துவம்- முட்டை

Egg
By Fathima Jun 13, 2025 08:12 AM GMT

பழைய முட்டையை விட புதிய முட்டையை தேர்ந்தெடுப்பது நலம். மற்ற பறவைகளின் முட்டையை விட கோழி முட்டை சிறந்தது, அது நடுநிலைத்தன்மை உடையது இருந்தாலும் சற்றுக் குளிர்ச்சியை கொண்டது.

மருத்துவ பேரறிஞர் இப்னு சீனா அவர்கள் கானூன் எனும் தமது நூலில் கூறியுள்ளதாவது, அதன் மஞ்சள் கரு ஈரத்தன்மை கொண்ட வெப்பமானது. அது சரியான வகையில் இரத்தத்தை உண்டுபண்ணுகிறது. அது எளிமையான உணவாகவும் ஆகிவிடுகிறது. இரைப்பை மென்மையாக இருந்தால் அதிலிருந்து மிக விரைவாக வெளியேறி விடுகிறது.

நபிவழி மருத்துவம்- முட்டை | Egg Benefits In Islam In Tamil

மற்ற அறிஞர்கள் கூறியுள்ளதாவது, முட்டையின் மஞ்சள் கரு வலியை போக்கக்கூடியதும் தொண்டையையும் குடலின் உட்பகுதியையும் மென்மையாக்கக்கூடியதும் ஆகும். தொண்டைப்புண், இருமல், இரைப்பை புண்கள், சிறுநீரகம் உள்ளிட்ட அனைத்திற்கும் பலனளிக்கக்கூடியது.

சொரசொரப்புத்தன்மையை போக்கக்கூடியது. குறிப்பாக தேங்காய் எண்ணெய்யோடு கலந்து கொண்டால் சொரசொரப்புத்தன்மை முற்றிலும் அகன்றுவிடும். நெஞ்சில் உள்ள சளியை கரைக்கக்கூடியது. அதை மென்மைப்படுத்தக்கூடியதும் தொண்டையின் சொரசொரப்புத்தன்மையை எளிதாக்கக்கூடியதும் ஆகும்.

நபி வழி மருத்துவம் - எலுமிச்சை

நபி வழி மருத்துவம் - எலுமிச்சை


இதன் வெள்ளைக்கரு வெப்பக்கட்டி உள்ள கண்ணில் சொட்டாக விட்டால் அதை குளிர்ச்சியாக்கி வலியை போக்கிவிடும். நெருப்பால் ஏற்பட்ட காயங்கள் மீது அதை தேய்த்தால் அதன் வடுக்களை விட்டுவைக்காது.

வலி உள்ள இடத்தில் அதை தடவினால் பயனளிக்கும், சூரிய வெப்பத்தால் ஏற்படுகின்ற தற்காலிக எரிச்சலைத் தடுக்கும், சாம்பிராணி, குங்கிலியம் போன்றவற்றோடு இதனை சேர்த்து நெற்றியில் தடவினால் ஃப்ளூ காய்ச்சல் குணமாகும்.

நபிவழி மருத்துவம்- முட்டை | Egg Benefits In Islam In Tamil iStock

இதுகுறித்து மருத்துவ பேரறிஞர் இப்னு சீனா அவர்கள் கானூன் எனும் தமது நூலில் உள்ளம் சார்ந்த நோய்கள் பகுதியில் தெரிவித்துவிட்டு பின்னர் கூறியுள்ளதாவது, அது பொதுவான மருந்துகளில் இல்லையென்றாலும் உள்ளத்திற்கு ஊட்டமளிப்பதில் அதற்கு பெரும் பங்குண்டு.

அதாவது பித்தத்தை தணிப்பதில் பெரும் பங்குண்டு, அது மூன்று பொருட்களை உள்ளடக்கியுள்ளது.

1. விரைவாக ரத்தமாக மாறுதல்

2. கழிவு குறைவாக இருத்தல்

3. அதிலிருந்து உண்டாகின்ற ரத்தம் உள்ளத்திற்கு ஊட்டமளிக்கின்ற ரத்தத்திற்கு ஏற்றதாக இருத்தல்.

இதனால் தான் அது ஆன்மாவில் ஏற்படக்கூடிய வழமையான நோய்களை தவிர்த்துக்கொள்ள மிகவும் ஏற்றதாக உள்ளது.

- பேரறிஞர் ஷம்சுத்தீன் முஹம்மது இப்னு அபீபக்ர் இப்னு கய்யிம் (ரஹ்)