அடுத்த வருடம் முதல் அனைத்து பரீட்சைகளும் தாமதமின்றி நடைபெறும்! கல்வி அமைச்சர்
Ministry of Education
Education
By Mayuri
அடுத்த வருடம் முதல் அனைத்து பரீட்சைகளும் தாமதமின்றி நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
முதல் தவணை
அவர் மேலும் தெரிவிக்கையில், மூன்றாவது தவணை இரண்டு வாரங்களுக்கு நடத்தப்பட வேண்டும்.அதன்படி, ஜனவரி 20ஆம் திகதி முதல் தவணை ஆரம்பமாக உள்ளது.
சீருடை, பாடப்புத்தகம் என அனைத்தும் இப்போதே தயாராகிவிட்டன என்று உத்தரவாதம் தரலாம்.
க.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |