கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் இடையில் கலந்துரையாடல்

United Nations Trincomalee Eastern Province
By Laksi Nov 09, 2024 09:35 AM GMT
Laksi

Laksi

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான ஆலோசகர் பெட்றிக் மெக்கார்த்தி ஆகியோருக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது நேற்று (8) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, முதலில் ஆளுநரை வாழ்த்திய பெட்றிக் மெக்கார்த்தி, இந்த வாரம் முழுவதும் கிழக்கு மாகாணத்திற்குள் விஜயம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடு

பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடு

காணிப்பிரச்சினை

தேர்தல் காலத்தின் அரசியல் இயக்கவியல் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், ஜனாதிபதி தேர்தலுக்கு பிந்திய தேர்தல் காலம் மிகவும் அமைதியான தேர்தல் காலம் எனவும், இந்த நாடாளுமன்ற தேர்தல் காலம் அமைதியாக இருப்பதாகவும் ஆளுநரிடம் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் இடையில் கலந்துரையாடல் | Eastern Governor Meet Advisor Un Coordinator

மேலும், கிழக்கு மாகாணத்தில் நிலவும் காணிப்பிரச்சினை, மீள்குடியேற்றம், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் தொடர்பாக ஆளுநரிடம் தெரிவிக்கப்பட்டது.

ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தினால் மக்கள் பெரிதும் கவரப்பட்டுள்ளதாக தெரிவித்த ஆளுநர், இந்த நேரத்தில் மாகாணத்தில் மிகக்குறைந்தளவு தேர்தல் பிரச்சினைகள் காணப்படுவதாக தூதுக்குழுவிடம் குறிப்பிட்டுள்ளார்.

காணிப்பிரச்சினைகள் தொடர்பில், தேசியக் கொள்கையில் திட்டமிட்டு நியாயமான முறையில் தீர்வு காண மத்திய அரசுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக ஆளுநர் கூறியுள்ளார்.

மாத்தறையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்கான தீர்வுகளை வழங்க பணிப்புரை

மாத்தறையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்கான தீர்வுகளை வழங்க பணிப்புரை

இனப்பிரச்சினைகள் 

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் வாழும் இந்த கிழக்கு மாகாணத்தில் இனப்பிரச்சினைகள் அல்லது தேவையற்ற அரசியல் தலையீடுகளை அடிப்படையாக கொண்டு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்பட மாட்டாது என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் இடையில் கலந்துரையாடல் | Eastern Governor Meet Advisor Un Coordinator

இலங்கையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான அதிகபட்ச ஆதரவை வழங்குவதற்கு தாங்கள் செயல்பட்டு வருவதாகவும், நில ஆணைக்குழுவுக்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவையும், தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவ அமைப்பை உருவாக்கத் தேவையான தொழில்நுட்ப ஆதரவையும் வழங்குவதற்கும் தாங்கள் தற்போது பணியாற்றி வருவதாக பெட்றிக் மெக்கார்த்தி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலறி மாளிகை அருகில் உள்ள வீதிகள் மீளத் திறப்பது மிகவும் அரிதானது என்றாலும், அது அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை அதிகரிப்பதோடு அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் மிக நெருக்கமான உறவை ஏற்படுத்தும் எனவும் பெட்றிக் கூறினார்.

அரசாங்கத்தின் மீது பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதே எமது முக்கிய பணிகளில் ஒன்று எனவும், இதன் மூலம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் எனவும் தெரிவித்த ஆளுநர், மாகாணத்தின் கல்வி, சுகாதாரம், சுற்றுலா, மக்களின் வாழ்க்கை தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட 58 இலங்கையர்கள் கைது

இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட 58 இலங்கையர்கள் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW