மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம்: பிறப்பிக்கப்பட்ட இறுதி உத்தரவு

Maithripala Sirisena Sri Lankan political crisis Eastern Province
By Dharu Jul 15, 2024 08:07 AM GMT
Dharu

Dharu

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அடிப்படை உரிமை மீறல்களுக்காக நட்டஈடு வழங்கப்படவுள்ள மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையை ஆகஸ்ட் 30 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் வழங்கப்படவிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈட்டில் 58 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்தார்.

மேலும், எஞ்சிய தொகையை செலுத்த ஆறு வருட கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் கோரியிருந்தார்.

நீதிமன்ற அவமதிப்பு 

எனினும் குறித்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம்: பிறப்பிக்கப்பட்ட இறுதி உத்தரவு | Easter Sunday Attack Maithiri

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு எதிராகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் உரிய பணத்தை செலுத்தாவிட்டால், அந்த நபர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளை முன்வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் 7 பேர் கொண்ட உயர் நீதிமன்ற குழு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW