ஈஸ்டர் தாக்குதல் பிரதான சூத்திரதாரியை அம்பலப்படுத்தும் திகதி அறிவிப்பு
ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை கொண்டு தாக்குதல் பிரதான சூத்திரதாரி யார் என்பது அம்பலப்படுத்தப்படும் என எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.
எதிர்காலம் மார்ச் 31ஆம் திகதி பிரதான சூத்திரதாரி யார் என்பதை அம்பலப்படுத்த போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பிவித்துரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவத்தை வைத்துக்கொண்டு அரசாங்கங்கள் கவிழ்க்கப்பட்டதாகவும் அரசாங்கங்கள் அமைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்தி பலர் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வித காரணமும் இன்றி படைவீரர்கள் துன்புறுத்தப்பட்டனர் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஒன்றரை ஆண்டுகளாக கடின உழைப்பை வழங்கி ஈஸ்டர் தாக்குதல் பிரதான சூத்திரதாரியை கண்டறிதல் என்ற ஆய்வு நூல் ஒன்றை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வு நூல் எதிர்வரும் 31 ஆம் திகதி வெளியிடப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.