தேசிய மக்கள் சக்தியில் ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளி: அரசாங்கத்தின் விளக்கம்

Sri Lanka Easter Attack Sri Lanka NPP Government
By Faarika Faizal Oct 23, 2025 01:38 PM GMT
Faarika Faizal

Faarika Faizal

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் இருந்த மொஹமட் இப்ராஹிம் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளி அல்ல என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மொஹமட் இப்ராஹிமின் இரண்டு மகன்கள் மீது ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் குற்றச்சாட்டு இருந்தாலும் அவர் ஒரு குற்றவாளி அல்ல என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 

வெலிகம பிரதேச சபை தலைவரின் கொலை : அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் ஹக்கீம்

வெலிகம பிரதேச சபை தலைவரின் கொலை : அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் ஹக்கீம்

அரசாங்கம் தயங்காது

இதனாலேயே அரசாங்கம் அவர் மீது எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியில் ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளி: அரசாங்கத்தின் விளக்கம் | Easter Attack

அத்துடன், குற்றவாளி ஆளும் தரப்பில் இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்காது என அவர் கூறியுள்ளார். 



You May Like This Video...

  

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான பிரதேச சபை தலைவருக்கு பாதாள உலகுடன் தொடர்பு

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான பிரதேச சபை தலைவருக்கு பாதாள உலகுடன் தொடர்பு

மூடப்பட்ட இஸ்ரேலின் சபாத் இல்லம்! ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த எம்.பி

மூடப்பட்ட இஸ்ரேலின் சபாத் இல்லம்! ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த எம்.பி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW