திருகோணமலை கடற்பரப்பில் நிலநடுக்கம்!
By Dharu
திருகோணமலை கடல் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
திருகோணமலைக்கு வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (18) மாலை சுமார் 4:06 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது .
இந்த நிலநடுக்கம் நாட்டில் நிறுவப்பட்ட நான்கு நில அதிர்வு அளவீடுகளாலும் பதிவு செய்யப்பட்டதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வு அளவீடுகள் மகாகனதர, ஹக்மான, பல்லேகலே மற்றும் புத்தங்கல ஆகிய பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன.