இலங்கைக்குள் பிரவேசிக்கும் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்!

Sri Lanka Police Sri Lanka Crime
By Chandramathi Mar 12, 2024 01:38 AM GMT
Chandramathi

Chandramathi

இலங்கையில், குறிப்பாக கிராமப்புறங்களில், உலக சுகாதார அமைப்பால் தடை செய்யப்பட்டுள்ள இலத்திரனியல் சிகரெட்டுகள் (E-Cigarettes) வேகமாக பரவி வருவதாக கலால் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,''கம்பஹா மற்றும் ஜா-எல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சுமார் 500,000 பெறுமதியான இ-சிகரெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடல் வழிகள்

கட்டுநாயக்க விமான நிலையம், கொழும்பு துறைமுகம் மற்றும் ஏனைய கடல் வழிகள் ஊடாக இ-சிகரெட்டுகள் இலங்கைக்குள் பிரவேசிப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கைக்குள் பிரவேசிக்கும் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்! | E Cigarettes In Sri Lanka

இந்த இ-சிகரெட்டுகள் செயற்கையாக புகையை உருவாக்குவதால், அதிக நச்சுத்தன்மை கொண்டவை, அதிக போதைப்பொருள் மற்றும் அதிக புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டவை என்பதால், அவை உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்காவால் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு, கம்பஹா மற்றும் பாணந்துறை பிரதேசங்களிலும், அதிக மக்கள் தொகை கொண்ட பிரதேசங்களிலும், பாடசாலை மாணவர்கள் மற்றும் 40 வயதுக்குட்பட்ட தனிநபர்கள், அதிகளவில் இ-சிகரெட் பாவனையை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சிரமங்கள்

இந்த இ-சிகரெட்டுகள் படிப்படியாக தொலைதூரப் பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இ-சிகரெட்டுகள் ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்யப்பட்டு விநியோகிக்கப்படுவதுடன், அவை பெரும்பாலும் ஸ்மார்ட் வாட்ச்கள், பென் டிரைவ்கள், பவர் பேங்க்கள் மற்றும் நறுமணப் போத்தல்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்குள் பிரவேசிக்கும் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள்! | E Cigarettes In Sri Lanka

சாதாரண சிகரெட்டின் கூறுகளைக் கொண்டிருக்காமல், மாம்பழம், ஆரஞ்சு, செர்ரி போன்ற பல்வேறு பழங்களின் வாசனையுடன் இருப்பதால், இ-சிகரெட்டுகளை அடையாளம் காண்பதில் அதிகாரிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.''என தெரிவித்துள்ளார்.