அம்பாறையில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

Ampara Eastern Province General Election 2024 Parliament Election 2024
By Laksi Oct 17, 2024 10:37 AM GMT
Laksi

Laksi

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் (DTNA) சங்கு சின்னத்தில் போட்டியிடும் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டமானது, நேற்றையதினம் (16) காரைதீவு கலாசார மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, கூட்டணியில் அங்கம் வகிக்கும் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளட், ஈரோஸ் ஜனநாயக முன்னணி, ஜனநாயக போராளிகள் அமைப்பு ஆகிய கட்சிகளின் அம்பாறை மாவட்ட தலைவர்கள், முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

400 பில்லியன் ரூபா கடன் பெற்றுள்ள புதிய அரசாங்கம்: வெளியான தகவல்

400 பில்லியன் ரூபா கடன் பெற்றுள்ள புதிய அரசாங்கம்: வெளியான தகவல்

வேட்பாளர்கள் அறிமுகம்

அம்பாறை இணைப்பாளர் கென்றி மகேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டதுடன், வேட்பாளர்கள் கட்சி முக்கியஸ்தர்களின் உரைகளும் இடம் பெற்றன.

அம்பாறையில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் | Dtna Candidate List Ampara District

இதன் படி, அறிமுகப்படுத்தப்பட்ட அம்பாறை மாவட்ட வேட்பாளர்களுக்கும், அவர்களது இலக்கங்களும் பின்வருமாறு...

இலக்கம் 01 கதிர்காமத்தம்பி வேலுப்பிள்ளை

இலக்கம் 02 கிருஸ்ணபிள்ளைலிங்கேஸ்வரன்

இலக்கம் 03 தியாகராசா கார்த்திக்

இலக்கம் 04 பாலசுந்தரம் பரமேஸ்வரன்

இலக்கம் 05 ராஜகுமார் பிரகாஜ்

இலக்கம் 06 சபாபதி நேசராசா

இலக்கம் 07 சிந்தாத்துரை துரைசிங்கம்

இலக்கம் 08 சுப்ரமணியம்தவமணி

இலக்கம் 09செல்லத்தம்பி புகனேஸ்வரி

இலக்கம் 10 சோமசுந்தரம் புஸ்ப்பராசா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

வாக்காளரின் இடது கை பெருவிரலில் அடையாளம் இடப்படும்: தேர்தல் ஆணைக்குழு

வாக்காளரின் இடது கை பெருவிரலில் அடையாளம் இடப்படும்: தேர்தல் ஆணைக்குழு

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGallery