நபிவழி மருத்துவம்- உலர் திராட்சை
உலர் திராட்சையில் தரமானது அதன் பருமன் பெரிதாகவும், அதன் சதைப்பற்று தடித்தும், அதன் தோல் மெலிந்தும், அதன் விதை நீக்கப்பட்டும் இருக்கும், அதுதான் மிகவும் தரமானதாகும்.
உலர்திராட்சையின் சதைப்பற்று முதல்நிலை குளிர்வெப்பமுடையதாகும். அதன்விதை காய்வுத் தன்மையுடன் கூடிய குளிர்ச்சியானதாகும்.
அது பொதுவான திராட்சையைப் போன்றதுதான், அதிலிருந்து எடுக்கப்படுகின்ற இனிப்பு வெப்பத்தன்மையுடையது. அதில் புளிப்புச் சுவையுடைய பழம் குளிர்ச்சியானதும் பிடிப்புத்தன்மையுடையதும் ஆகும்.

வெள்ளை நிறத்திலான உலர் திராட்சை மற்றதைவிட அதிகப் பிடிப்புத்தன்மையுடையதாகும். இதன் சதைப்பற்றை சாப்பிட்டால் நுரையீரலையும் மூச்சுக்குழலையும் சீராக்கும்.
இருமல், சிறுநீரக வலி, விதைப்பையின் வலி ஆகியவற்றிற்கு நல்ல பயன்தரும். இரைப்பையை வலுவாக்கி வயிற்றை மென்மையாக்கும்.
இனிப்பு சுவையுடைய சதைப்பற்றை சாப்பிடுவது திராட்சையை விட மிகுதியான உணவுச் சத்தையும், காய்ந்த அத்திப்பழத்தை விட குறைவான உணவுத் சத்தையும் வழங்குகிறது.
உணவை நெகிழவைத்து செரிக்க வைக்கக்கூடிய ஆற்றல் அதற்கு உண்டு. நடுநிலையான பிடிப்புத்தன்மையுடையது. மொத்தத்தில் அது இரைப்பை, கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை வலுப்படுத்துகிறது.
தொண்டை வலி, நெஞ்சுவலி, நுரையீரல், சிறுநீரகம், சிறுநீரக விதைப்பை ஆகியவற்றிற்கு மிகவும் பயனுள்ளது. இதில் நடுநிலையானது விதையில்லாமல் உண்பதாகும். அது மிகச்சிறந்த உணவுச்சத்தை வழங்குகிறது.

பேரீச்சம் பழத்தை போன்று அடைப்பை ஏற்படுத்தாது. இதனை விதையயோடு சாப்பிட்டால் அது இரைப்பை, கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றிற்கு மிகப்பெரும் பயன்தரும்.
இதில் இனிப்புச்சுவையுடைய, விதையில்லாத பழம் நீர்ச்சத்து உடையோருக்கும் சளி உடையோருக்கும் பயனுள்ளதாகும். இது கல்லீரலை செழிப்பாக்குகிறது.
எவர் நபிமொழியை மனனம் செய்ய விரும்புகிறாரோ, அவர் உலர்திராட்சையை சாப்பிடட்டும்- ஸுஹ்ரீ(ரஹ்)