வைத்தியர் அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Jaffna Sri Lanka Hospitals in Sri Lanka Law and Order
By Laksi Sep 26, 2024 07:47 AM GMT
Laksi

Laksi

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த உத்தரவானது  இன்று (26) சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக சாவகச்சேரி பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு, நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

விளக்கமறியல்

இந்தநிலையில், குறித்த வழக்கு இன்று சாவகச்சேரி நீதிமன்றில் நீதிபதி அ.யூட்சன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Dr Ramanathan Archuna Arrested

இதன்போது சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் சமர்ப்பிக்காமை, பிணையாளிகளை அவதூறுபடுத்தியமை, பிணையின் நிபந்தனைகளை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் அவரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலில் ஒன்றிணைவது குறித்து தமிழ், முஸ்லிம் கட்சிகள் கலந்துரையாடல்

பொதுத் தேர்தலில் ஒன்றிணைவது குறித்து தமிழ், முஸ்லிம் கட்சிகள் கலந்துரையாடல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW